Thursday, March 14, 2019

இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி

இலங்கைப் பாராளுமன்றம்

பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும் நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் தலைவர் என்ற வகையில் நீங்கள் நேரடியாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பொறுப்புக்கூறல் வேண்டும். நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு சுயாதீனமாகவும், விடய ரீதியாகவும் சான்றுப்படுத்துகின்ற மற்றும் ஆலோசனை வழங்குகின்ற ஆற்றலை உடையவராக இருத்தல் வேண்டும். மேலும் நிறுவனத்தின் இடர் முகாமைத்துவம், நிருவாகம் மற்றும் நல்லாட்சி சார்ந்த செயன்முறைகளின் உற்பத்தித்திறனை மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்த முறையான மற்றும் ஒழுக்கமுறை ரீதியான அணுகுமுறைகளை முன்வைப்பதன் மூலம் நிறுவனத்தின் நோக்கங்களையும் மற்றும் இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு உதவுவது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் விண்ணப்பங்களை 2019, மாச்சு மாதம் 22 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் ''பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். 

விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ''பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் பதவி" எனக் குறிப்பிடுதல் வேண்டும். (இந்த அறிவித்தல் பற்றிய விபரங்களை https://www.parliament.lk/ எனும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்). 



1. சம்பள அளவுத்திட்டம்:

2016.11.07 ஆந் திகதிய 06/2016 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின் I ஆம் அட்டவணைக்கு இணங்க இந்தப் பதவிக்கு உரித்தான சம்பள அளவுத்திட்டம் ரூபா 62,595 – 7 x 1,630 / 6 x 2,170 –  ரூபா 87,025 ஆகும். 

ஆகையால், நியமனத் திகதியிலிருந்து செயல்வலுப் பெறும் வகையில் மேற்குறித்த சுற்றறிக்கையிலுள்ள II ஆம் அட்டவணைக்கு இணங்க ரூபா 56,111.00 எனும் மாதாந்த சம்பளப் படிநிலையில் அமர்த்தப்பட்டு உங்களுக்கான சம்பளம் செலுத்தப்படும் (சகல மேலதிக கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத்திட்டத்திற்குரிய ஆகக்குறைந்த ஆரம்ப சராசரி மாதாந்த சம்பளம் ரூபா 117,000.00 ஆகும்).

2. வயதெல்லை:

விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதிக்கு 22 வயதிற்குக் குறையாதவராகவும் மற்றும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (ஏற்கனவே அரச சேவையிலுள்ள/ மாகாண அரச சேவையிலுள்ள/  பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள பதவிகளில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள இந்த உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.)

3. கல்வித் தகைமைகள்:

அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படும் வர்த்தக/ முகாமைத்துவ/ கணக்கியல்/ பிரயோக கணக்கியல் ஆகிய பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. தொழில் தகைமைகள்:

இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ICASL) அல்லது பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகம் (CIMA) அல்லது சான்று பெற்ற பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ACCA) மூலம் நடாத்தப்படும் இடைநிலை மட்டத்திலான பரீட்சையில் (Intermediate Level) சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

5. அனுபவம்:

மேற்குறித்த கல்வித் தகைமைகளையும் மற்றும் தொழிற் தகைமைகளையும் பூர்த்தி செய்ததை தொடர்ந்து அரச சேவையில் அல்லது ஒரு அரச கூட்டுத்தாபனத்தில் அல்லது ஒரு நியதிச் சட்ட சபையில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் நிதித் துறையில் அல்லது கணக்காய்வுத் துறையில் ஒரு முகாமைத்துவ பதவியில்/ பதவிநிலைப் பதவியில்/ நிறைவேற்று மட்டப் பதவியில் 07 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவத்தைப் பெற்ற உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.

அல்லது 

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் ''I" அல்லது அதை விட அதிகப்படியான சம்பளத் தொகுதியிலுள்ள ஒரு பதவியில் 10 வருடங்களுக்குக் குறையாத சேவை அனுபவத்தையுடைய உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.

6. ஆட்சேர்ப்பு முறை:

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் ஒரு நேர்முகத் தேர்வு குழுவின் மூலம் விண்ணப்பதாரிகளின் கல்வித் தகைமைகள் தொழில் தகைமைகள் மற்றும் விடயம் சார்ந்த அறிவு, துறை சார்ந்த அனுபவம், தொடர்பாடல் திறமைகள் மற்றும் ஆளுமை என்பவற்றை மதிப்பிடும் பொருட்டு நடாத்தப்படுகின்ற ஒரு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். 



7. சேவையில் அமர்த்துவதற்கான நியதிகளும் நிபந்தனைகளும்:

(i) இந்தப் பதவி நிரந்தரமானது. இந்தப் பதவிக்குரிய ஓய்வூதிய சம்பள அளவுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு விண்ணப்பதாரர்கள் இயைந்தொழுக வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் அல்லது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் ஓய்வூதிய உரித்துடைய பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டால் அத்தகைய நபர் ஒரு வருட பதில் கடமை கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதிக்கு ஏற்புடைய நிதி மற்றும் திணைக்கள ஒழுங்குவிதிகளுக்கு இயைந்தொழுக வேண்டும்.

(iii) தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அநாதைகள், விதவைகள் / தபுதாரர் ஓய்வூதிய நிதியத்திற்கு அவரது சம்பளத்திலிருந்து அரசாங்கம் தீர்மானிக்கும் விகிதாசாரத்தில் ஒரு பங்களிப்பு தொகையைச் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

(iv) தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

8. கீழ்க்காணும் சான்றிதழ்களின் (மூலப்பிரதிகளல்ல) பிரதிகளை விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். சமர்ப்பிக்குமாறு கேட்கப்படும் பட்சத்தில் மாத்திரம் அத்தகைய சான்றிதழ்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

(அ) பிறப்புச் அத்தாட்சிப்பத்திரம்;

(ஆ) கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்;

(இ) தொழில்சார் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்;

(ஈ) அனுபவத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்.

9. அரசாங்க / மாகாண அரசாங்க சேவையில் / அரசாங்க கூட்டுத்தாபனங்களில் மற்றும் நியதிச்சட்ட சபைகளில்/ பாராளுமன்ற செயலாளர் பணியாற்றொகுதியில் பணியாற்றுகின்ற விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அந்தந்த திணைக்கள நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

10. ஏதேனும் வழிகளில் செல்வாக்குகளை பிரயோகிப்பது இந்தப் பதவிக்கான தகைமையை இழக்கச் செய்யலாம்.

11. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு விடயம் பொய்யென ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் கண்டறியப்பட்டால் அவர் தகுதியற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும் மற்றும் நியமனத்தின் பின்னர் அவ்வாறு கண்டறியப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் ஆளாக்கப்படுவார்.

12. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் அல்லது மேற்குறித்த சான்றிதழ்களின் பிரதிகளின்றி அனுப்பப்படும் அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் திணைக்கள தலைவர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும் மாதிரிப்படிவத்திற்கு அமையத் தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். 


இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி 
https://sigaram10.blogspot.com/2019/03/srilanka-parliament-post-internal-chief-auditor.html 
#பாராளுமன்றம் #வேலைவாய்ப்பு #அரசாங்கம் #கணக்காய்வு #விண்ணப்பம் #இலங்கை #ஓய்வூதியம் #நேர்முகப்_பரீட்சை #சுயவிவரம் 

Monday, February 25, 2019

தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகப் பதிவாளர்

பதிவாளர் நாயகம் திணைக்களம்
யாழ்ப்பாணம் மாவட்டம் 

தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும்
விவாகம் / மேலதிக விவாகப் பதிவாளர்
பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரர் உரிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகப் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும் மற்றும் போதியளவான ஆதனத்துக்கு உரித்தான, பிரதேசவாசிகளால் நன்மதிப்பைப் பெறுபராகவும் இருத்தல் வேண்டும்.

இந்தப்பதவிக்காக 40 வயதுக்கு குறையாத 62 வயதுக்கு மேற்படாத ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 


 
விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் திருமணமானவராகவும் திருமணமாகி 5 வருடங்களுக்குக் குறையாதவராக இருத்தல்  வேண்டும். 

விதவைகள் / தபுதாரர் அல்லது விவாகரத்துப் பெற்றவர்கள் விண்ணப்பித்தல் ஆகாது.

இதற்கான விண்ணப்பங்களை கிராம  பட்டியல்கள் / கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய 'இணைப்பு 1' உரிய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும் உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் மாதம் 15 ஆம் திகதி அல்லது
அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும். 

* யாழ்ப்பாணம் உடுவில் வலி தெற்கு பிரிவில் மேலதிக விவாகப் (பொது) பதிவாளர் பதவி (தமிழ்) 
அரசாங்க அதிபர்/ மாவட்டச்
செயலாளர்/ மேலதிக பதிவாளர்
நாயகம், மாவட்டச் செயலாளர்
அலுவலகம், யாழ்ப்பாணம். 

* யாழ்ப்பாணம் உடுவில் ஏழாலை பிரிவில் பிறப்பு, இறப்பு மற்றும் வலி தெற்கு பிரிவில் விவாகப் (பொது) பதிவாளர் பதவி (தமிழ்)
அரசாங்க அதிபர்/ மாவட்டச்
செயலாளர்/ மேலதிக பதிவாளர்
நாயகம், மாவட்டச் செயலாளர்
அலுவலகம், யாழ்ப்பாணம்.

அறிவித்தல்: 
பதிவாளர் நாயகம் திணைக்களம்,
இல. 234/ 43 டென்சில்
கொப்பேகடுவ மாவத்த
பத்தரமுல்ல. 

தமிழ் மிரர் நாளிதழ் 
25.02.2019 
பக்கம் 11 

மற்றும் 

இலங்கை அரசாங்க வர்த்தமானி 
நாள் : 22/02/2019 

தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகப் பதிவாளர் 
https://sigaram10.blogspot.com/2019/02/Post-of-Registrars-Births-Deaths-and-Marriages-tamil.html 

Wednesday, February 13, 2019

கலாசார அலுவல்கள் திணைக்களம் | அரசாங்க வேலைவாய்ப்பு

கலாசார அலுவல்கள் திணைக்களம் 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகைமையுடைய இலங்கை வாழ் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

01. பதவி வெற்றிடம் / எண்ணிக்கை: 

கணினி தரவு பதிவுநர் - 04

திட்ட ஒருங்கிணைப்பாளர் - 01

புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர் - 01

02. சேவையில் அமர்த்துதல் மற்றும் சேவை நிபந்தனைகள் :

இந்தப் பதவி நிரந்தர, ஓய்வூதிய கொடுப்பனவுக்குட்பட்டது. இந்தப் பதவிக்காக உரித்தான ஓய்வூதியம் பற்றி அரசினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு உட்படுதல் வேண்டும்.

சம்பள பிரிவு இலக்கம் : MN01-2016

சம்பள நிலை : ரூபா 27,140 - 10x300 - 11x350 - 10x495 - 10x660 - ரூபா 45,540

03. தகைமைகள் :

i. கல்வித் தகைமைகள் :

(அ) மொழித்திறன் (சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம்) கணிதம் மற்றும் மேலும் இரண்டு பாடங்கள் திறமைச் சித்தியுடன் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

மற்றும் 

(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த ஏனைய பாடங்களில் குறைந்த பட்சம் ஒரு பாடமாவது சித்தியடைந்திருத்தல்.

மற்றும்

(இ) திட்ட ஒருங்கிணைப்பாளர் - தொழில் துறைக்கு ஏற்ப தேசிய தொழிற்பயிற்சி திறமை (NVQ) 04 ஆம் மட்ட தகைமை பு{ரணப்படுத்தியிருத்தல் அல்லது உயர் கல்வி அமைச்சு மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பத்துடன்கூடிய நிறுவனங்களில் தொடர்புகொண்டு கருத்துக்கள் பெற்றுக் கொண்டதன் பின்பு மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப தகைமைகள் அனைத்து விதத்திலும் சமனானது என மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறு தொழில்நுட்ப தகைமைகள் இருப்பின் விசேட தகைமையாகக் கருதப்படும்.

2. (i) கணினி தரவு பதிவுநர் - மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி; ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவகத்தில் 720 மணித்தியாலங்களுக்கு குறையாமல் கணினி பாடநெறியை பு{ர்த்தி செய்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்;

(ii) தொழிற் தகைமைகள் : கணினி தகவல் தயாரித்தல்/ தட்டச்சு/ மனுகோரல் பற்றிய மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடநெறியினை பூர்த்தி செய்திருத்தல் விசேட தகைமையாகக் கருதப்படும்;

(iii) அனுபவம் :- குறித்த துறையில் பெற்றுள்ள அனுபவம் விசேட தகைமையாகக் கருதப்படும்

(iv) உடற்தகைமை:- அனைத்து விண்ணப்பதாரியும் இலங்கையில் எப்பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும் பதவியில் கடமையாற்றுவதற்கும் போதுமான உடல் மற்றும் உள ஆரோக்கியத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். 

(எ) வேறு தகைமைகள்:-

1. விண்ணப்பதாரர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்;

2. விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்;

04. வயதெல்லை:- 18 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (தற்போது அரச சேவையில் உள்ளவர்களுக்காக ஆகக்கூடிய வயதெல்லை பொருந்தாது.)

05. ஆட்சேர்ப்பு முறை:-

கலாசார அலுவல்கள் பணிப்பாளரின் நியமனத்திற்கு அமைவாக அனுமதியளிக்கப்பட்ட தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக சேர்த்துக் கொள்ளப்படுவர். உடற்தகைமை மற்றும் தகைமைகளை பரிசீலித்துப் பார்த்து புள்ளிகளின் திறமை அடிப்படையில் வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக இணைத்துக் கொள்ளப்படுவர்.

தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை : 

மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கப்படும் விடயங்கள் ஆகக்கூடிய புள்ளிகள்

1. மேலதிக கல்வித் தகைமை 05

2. மேலதிக தொழிற் தகைமை 20

3. மேலதிக அனுபவம் 30

4. கணினி அறிவு 15

5. ஆங்கில மொழி அறிவு 15

6. நேர்முகப் பரீட்சையின் போது காண்பிக்கப்பட்ட திறமைகள் 05

= மொத்தம் 100 

பெற்றுக் கொண்ட புள்ளிகள் : பொருந்தாது 

06. விண்ணப்பப்படிவம் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி படிவத்திற்கு அமைவாக A4 (8.27cm x 11.69cm) அளவு கொண்ட தாளில் தயாரித்து 2019.02.22 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் ''பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 08 ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை"" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். தாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் பூரணமல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். (விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை தெளிவாகக் குறிப்பிடவும்.) 



மாதிரி விண்ணப்பப்படிவம் 

கலாசார அலுவல்கள் பணிப்பாளர்.
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
08 ஆம் மாடி,
செத்சிறிபாய,
பத்தரமுல்லை.

அலுவலக உபயோகத்திற்காக

கலாசார அலுவல்கள் திணைக்களம்

................................... பதவிக்கான விண்ணப்பம்

1. முதல் எழுத்துக்களுடன் பெயர் : .......................................

2. முழுப் பெயர் : .............................

3. பிறந்த திகதி : ...................................

4. வயது (2019.02.22) ஆந் திகதிக்கு : வருடங்கள் : ................... மாதங்கள் :.................. நாட்கள் :..............

5. தேசிய ஆளடையாள அட்டை இல. : .....................

6. பால் : (ஆண்/ பெண்) : ................

7. முகவரி : ...............................

8. தொலைபேசி இலக்கம் :..............................

9. கல்வித் தகைமைகள் : ..............................

(i) க.பொ.த. (சா/ தரம்)

வருடம் : சுட்டெண் :

பாடம் பெற்ற சித்தி பாடம் பெற்ற சித்தி

1.
2. 
3. 
4. 
5. 
6. 
7. 
8. 
9. 
10. 

(ii) க.பொ.த. (உ/தரம்)

வருடம் : சுட்டெண்:

பாடம் பெற்ற சித்தி

1.

2.

3.

4.

10. தொழில் தகைமைகள் :

11. அனுபவம் :

இவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானவையென்றும் சரியானவையென்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். இதில் உள்ள ஏதேனும் தகவல்கள் பொய்யானவை அல்லது பிழையானவை என தெரிவு செய்வதற்கு முன் நிரூபிக்கப்பட்டால் அதன் காரணமாக நான் இப்பதவிக்கு தகுதி அற்றவராகவும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சேவையில் இருந்து நீக்கப்படுவேன் என்பதையும் அறிவேன்.

.............................................

விண்ணப்பதாரியின் கையொப்பம்.

திகதி : ..................................

2-420 


சிகரம் 

கலாசார அலுவல்கள் திணைக்களம் | அரசாங்க வேலைவாய்ப்பு  
கணினி தரவு பதிவுநர் / திட்ட ஒருங்கிணைப்பாளர் / புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர் 
https://sigaram10.blogspot.com/2019/02/srilanka-cultural-dept-vacancy-feb.html 

Monday, August 27, 2018

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் | முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள் 
  • பாடசாலை பணி உதவியாளர் 
  • காவல்காரர் 
  • உதவி சமையல்காரர் 
சம்பளம் 


  • (PL1-2016) - 24,250-10x250-10x270-10x300-12x330 = 36,410/- 
தகைமை 



  • க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் 02 பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் 
முதன்மை நிலை அரைத் தேர்ச்சியுள்ள பதவிகள் 

  • சமையல்காரர் 
சம்பளம் 

  • (PL2-2016) - 25,250-10x270-10x300-10x330-12x350 = 38,450/- 
தகைமை 

  • மூன்றாம் மற்றும் தொழில்முறைக் கல்வி ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட தேசிய தொழில்முறை திறமைகளில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாம் மட்ட தகைமை 
விண்ணப்ப முடிவுத் திகதி : 2018/08/31 

விண்ணப்பங்கள் அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் 

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 


#Central Province #Vacancy #Clerk #Security #Application #LKA #Download #EducationalDepartment #Edu #Ministry #OnlineJobs #Jobs #Sigaram 

இணைய செய்தி ஊடகவியலாளர் | தமிழ் மொழி | தினகரன்

இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் நாளிதழான தினகரன் தனது இணையப் பதிப்புக்குத் தகுதிவாய்ந்த இளம் இணைய ஊடகவியலாளரை எதிர்பார்க்கிறது. 



தகைமைகள்: 

  • சிறந்த தமிழ் மொழி ஆற்றல் 
  • சுதந்திரமாகவும் குழுவாகவும் இணைந்து செயற்படல் 
  • பல் செயற்பாட்டுத் திறன் மற்றும் செய்தித் தொகுப்பாக்கம் 
  • நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு போன்றவற்றில் ஆர்வம் 
  • எவ்விதமான நேர அட்டவணைக்கும் வேலை செய்யும் ஆற்றல் 
  • Adobe Photoshop. Illustrator ஆகியவற்றின் அடிப்படை அறிவு 
  • சமூக வலைத்தள அறிவு 
  • புகைப்படங்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பு தொடர்பான தெளிவு மற்றும் தொகுப்பாக்க அறிவு 
உங்கள் விண்ணப்பங்களை 30/08/2018 திகதிக்கு முன்னர் info@lakehouse.lk என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். 


#news #media #vacancy #thinakaran #lka #journalist #tamil #newspaper #news #newsweb #writer #application #lakehouse #recruitment #salary #apply #sigaram 

Wednesday, August 22, 2018

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் இரண்டாம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 

OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO POSTS OF INSPECTOR OF CUSTOMS, GRADE II OF SRI LANKA CUSTOMS DEPARTMENT - 2018

அறிவித்தல் முறை : இலங்கை அரச வர்த்தமானி 

அறிவிப்பு திகதி : 2018.08.03 

விண்ணப்ப முடிவுத் திகதி : 2018.08.31 

எழுத்துப் பரீட்சைத் திகதி : 2018 டிசம்பர் 

பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள் : 

  1. 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். 
  2. ஆண், பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். 
  3. க.பொ.த சாதாரண தரத்தில் இரு தடவைகளில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி மற்றும் கணிதம் அடங்கலாக ஐந்து பாடங்களில் திறமைச் சித்தியும் ஆங்கில பாடத்தில் ஆகக் குறைந்தது சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும். 


சம்பளம் : 41,630. 

இலங்கையின் எப்பாகத்திலும் இரவிலும் பகலிலும் கடமையாற்றத் தயாராக இருக்க வேண்டும். 

நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களில் 10% பெண் விண்ணப்பதாரிகளுக்கு ஒதுக்கி வைக்கப்படும். 

விண்ணப்பங்களை 2018.08.31 திகதிக்கு முன்னதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் தயாரித்து பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். 

பரீட்சைக் கட்டணம் : ரூபா 600.00 

தற்போது அரசாங்கத்தில் சேவையாற்றுவோர் தங்கள் உயரதிகாரிகளின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். 


#அரசு #இலங்கை #வேலைவாய்ப்பு #சுங்கத்திணைக்களம் #பரீட்சை #விண்ணப்பம் #கல்வி #Customs #Vacancy #LKA #LK #Govt #Exams #Application #SigaramINFO