இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் சுங்கப் பரிசோதகர் II ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO POSTS OF INSPECTOR OF CUSTOMS, GRADE II OF SRI LANKA CUSTOMS DEPARTMENT - 2018
அறிவித்தல் முறை : இலங்கை அரச வர்த்தமானி
அறிவிப்பு திகதி : 2018.08.03
விண்ணப்ப முடிவுத் திகதி : 2018.08.31
எழுத்துப் பரீட்சைத் திகதி : 2018 டிசம்பர்
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள் :
- 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- ஆண், பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம்.
- க.பொ.த சாதாரண தரத்தில் இரு தடவைகளில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி மற்றும் கணிதம் அடங்கலாக ஐந்து பாடங்களில் திறமைச் சித்தியும் ஆங்கில பாடத்தில் ஆகக் குறைந்தது சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 41,630.
இலங்கையின் எப்பாகத்திலும் இரவிலும் பகலிலும் கடமையாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களில் 10% பெண் விண்ணப்பதாரிகளுக்கு ஒதுக்கி வைக்கப்படும்.
விண்ணப்பங்களை 2018.08.31 திகதிக்கு முன்னதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் தயாரித்து பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
பரீட்சைக் கட்டணம் : ரூபா 600.00
தற்போது அரசாங்கத்தில் சேவையாற்றுவோர் தங்கள் உயரதிகாரிகளின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
#அரசு #இலங்கை #வேலைவாய்ப்பு #சுங்கத்திணைக்களம் #பரீட்சை #விண்ணப்பம் #கல்வி #Customs #Vacancy #LKA #LK #Govt #Exams #Application #SigaramINFO
No comments:
Post a Comment