கலாசார அலுவல்கள் திணைக்களம்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகைமையுடைய இலங்கை வாழ் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01. பதவி வெற்றிடம் / எண்ணிக்கை:
கணினி தரவு பதிவுநர் - 04
திட்ட ஒருங்கிணைப்பாளர் - 01
புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர் - 01
02. சேவையில் அமர்த்துதல் மற்றும் சேவை நிபந்தனைகள் :
இந்தப் பதவி நிரந்தர, ஓய்வூதிய கொடுப்பனவுக்குட்பட்டது. இந்தப் பதவிக்காக உரித்தான ஓய்வூதியம் பற்றி அரசினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு உட்படுதல் வேண்டும்.
சம்பள பிரிவு இலக்கம் : MN01-2016
சம்பள நிலை : ரூபா 27,140 - 10x300 - 11x350 - 10x495 - 10x660 - ரூபா 45,540
03. தகைமைகள் :
i. கல்வித் தகைமைகள் :
(அ) மொழித்திறன் (சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலம்) கணிதம் மற்றும் மேலும் இரண்டு பாடங்கள் திறமைச் சித்தியுடன் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த ஏனைய பாடங்களில் குறைந்த பட்சம் ஒரு பாடமாவது சித்தியடைந்திருத்தல்.
மற்றும்
(இ) திட்ட ஒருங்கிணைப்பாளர் - தொழில் துறைக்கு ஏற்ப தேசிய தொழிற்பயிற்சி திறமை (NVQ) 04 ஆம் மட்ட தகைமை பு{ரணப்படுத்தியிருத்தல் அல்லது உயர் கல்வி அமைச்சு மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பத்துடன்கூடிய நிறுவனங்களில் தொடர்புகொண்டு கருத்துக்கள் பெற்றுக் கொண்டதன் பின்பு மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப தகைமைகள் அனைத்து விதத்திலும் சமனானது என மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறு தொழில்நுட்ப தகைமைகள் இருப்பின் விசேட தகைமையாகக் கருதப்படும்.
2. (i) கணினி தரவு பதிவுநர் - மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி; ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவகத்தில் 720 மணித்தியாலங்களுக்கு குறையாமல் கணினி பாடநெறியை பு{ர்த்தி செய்து சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்;
(ii) தொழிற் தகைமைகள் : கணினி தகவல் தயாரித்தல்/ தட்டச்சு/ மனுகோரல் பற்றிய மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடநெறியினை பூர்த்தி செய்திருத்தல் விசேட தகைமையாகக் கருதப்படும்;
(iii) அனுபவம் :- குறித்த துறையில் பெற்றுள்ள அனுபவம் விசேட தகைமையாகக் கருதப்படும்
(iv) உடற்தகைமை:- அனைத்து விண்ணப்பதாரியும் இலங்கையில் எப்பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும் பதவியில் கடமையாற்றுவதற்கும் போதுமான உடல் மற்றும் உள ஆரோக்கியத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(எ) வேறு தகைமைகள்:-
1. விண்ணப்பதாரர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்;
2. விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்;
04. வயதெல்லை:- 18 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (தற்போது அரச சேவையில் உள்ளவர்களுக்காக ஆகக்கூடிய வயதெல்லை பொருந்தாது.)
05. ஆட்சேர்ப்பு முறை:-
கலாசார அலுவல்கள் பணிப்பாளரின் நியமனத்திற்கு அமைவாக அனுமதியளிக்கப்பட்ட தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக சேர்த்துக் கொள்ளப்படுவர். உடற்தகைமை மற்றும் தகைமைகளை பரிசீலித்துப் பார்த்து புள்ளிகளின் திறமை அடிப்படையில் வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக இணைத்துக் கொள்ளப்படுவர்.
தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை :
மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கப்படும் விடயங்கள் ஆகக்கூடிய புள்ளிகள்
1. மேலதிக கல்வித் தகைமை 05
2. மேலதிக தொழிற் தகைமை 20
3. மேலதிக அனுபவம் 30
4. கணினி அறிவு 15
5. ஆங்கில மொழி அறிவு 15
6. நேர்முகப் பரீட்சையின் போது காண்பிக்கப்பட்ட திறமைகள் 05
= மொத்தம் 100
பெற்றுக் கொண்ட புள்ளிகள் : பொருந்தாது
06. விண்ணப்பப்படிவம் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி படிவத்திற்கு அமைவாக A4 (8.27cm x 11.69cm) அளவு கொண்ட தாளில் தயாரித்து 2019.02.22 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் ''பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 08 ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை"" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். தாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் பூரணமல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். (விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை தெளிவாகக் குறிப்பிடவும்.)
மாதிரி விண்ணப்பப்படிவம்
கலாசார அலுவல்கள் பணிப்பாளர்.
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
08 ஆம் மாடி,
செத்சிறிபாய,
பத்தரமுல்லை.
அலுவலக உபயோகத்திற்காக
கலாசார அலுவல்கள் திணைக்களம்
................................... பதவிக்கான விண்ணப்பம்
1. முதல் எழுத்துக்களுடன் பெயர் : .......................................
2. முழுப் பெயர் : .............................
3. பிறந்த திகதி : ...................................
4. வயது (2019.02.22) ஆந் திகதிக்கு : வருடங்கள் : ................... மாதங்கள் :.................. நாட்கள் :..............
5. தேசிய ஆளடையாள அட்டை இல. : .....................
6. பால் : (ஆண்/ பெண்) : ................
7. முகவரி : ...............................
8. தொலைபேசி இலக்கம் :..............................
9. கல்வித் தகைமைகள் : ..............................
(i) க.பொ.த. (சா/ தரம்)
வருடம் : சுட்டெண் :
பாடம் பெற்ற சித்தி பாடம் பெற்ற சித்தி
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
(ii) க.பொ.த. (உ/தரம்)
வருடம் : சுட்டெண்:
பாடம் பெற்ற சித்தி
1.
2.
3.
4.
10. தொழில் தகைமைகள் :
11. அனுபவம் :
இவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானவையென்றும் சரியானவையென்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். இதில் உள்ள ஏதேனும் தகவல்கள் பொய்யானவை அல்லது பிழையானவை என தெரிவு செய்வதற்கு முன் நிரூபிக்கப்பட்டால் அதன் காரணமாக நான் இப்பதவிக்கு தகுதி அற்றவராகவும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சேவையில் இருந்து நீக்கப்படுவேன் என்பதையும் அறிவேன்.
.............................................
விண்ணப்பதாரியின் கையொப்பம்.
திகதி : ..................................
2-420
-இலங்கை அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் - 2110 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆந் திகதி வெள்ளிக்கிழமை -
சிகரம்
கலாசார அலுவல்கள் திணைக்களம் | அரசாங்க வேலைவாய்ப்பு
கணினி தரவு பதிவுநர் / திட்ட ஒருங்கிணைப்பாளர் / புத்தகக் களஞ்சிய பொறுப்பாளர்
https://sigaram10.blogspot.com/2019/02/srilanka-cultural-dept-vacancy-feb.html
No comments:
Post a Comment