Thursday, March 14, 2019

இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி

இலங்கைப் பாராளுமன்றம்

பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும் நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் தலைவர் என்ற வகையில் நீங்கள் நேரடியாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பொறுப்புக்கூறல் வேண்டும். நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு சுயாதீனமாகவும், விடய ரீதியாகவும் சான்றுப்படுத்துகின்ற மற்றும் ஆலோசனை வழங்குகின்ற ஆற்றலை உடையவராக இருத்தல் வேண்டும். மேலும் நிறுவனத்தின் இடர் முகாமைத்துவம், நிருவாகம் மற்றும் நல்லாட்சி சார்ந்த செயன்முறைகளின் உற்பத்தித்திறனை மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்த முறையான மற்றும் ஒழுக்கமுறை ரீதியான அணுகுமுறைகளை முன்வைப்பதன் மூலம் நிறுவனத்தின் நோக்கங்களையும் மற்றும் இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு உதவுவது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் விண்ணப்பங்களை 2019, மாச்சு மாதம் 22 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் ''பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். 

விண்ணப்பம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ''பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் பதவி" எனக் குறிப்பிடுதல் வேண்டும். (இந்த அறிவித்தல் பற்றிய விபரங்களை https://www.parliament.lk/ எனும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்). 



1. சம்பள அளவுத்திட்டம்:

2016.11.07 ஆந் திகதிய 06/2016 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின் I ஆம் அட்டவணைக்கு இணங்க இந்தப் பதவிக்கு உரித்தான சம்பள அளவுத்திட்டம் ரூபா 62,595 – 7 x 1,630 / 6 x 2,170 –  ரூபா 87,025 ஆகும். 

ஆகையால், நியமனத் திகதியிலிருந்து செயல்வலுப் பெறும் வகையில் மேற்குறித்த சுற்றறிக்கையிலுள்ள II ஆம் அட்டவணைக்கு இணங்க ரூபா 56,111.00 எனும் மாதாந்த சம்பளப் படிநிலையில் அமர்த்தப்பட்டு உங்களுக்கான சம்பளம் செலுத்தப்படும் (சகல மேலதிக கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத்திட்டத்திற்குரிய ஆகக்குறைந்த ஆரம்ப சராசரி மாதாந்த சம்பளம் ரூபா 117,000.00 ஆகும்).

2. வயதெல்லை:

விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதிக்கு 22 வயதிற்குக் குறையாதவராகவும் மற்றும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (ஏற்கனவே அரச சேவையிலுள்ள/ மாகாண அரச சேவையிலுள்ள/  பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள பதவிகளில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள இந்த உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.)

3. கல்வித் தகைமைகள்:

அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படும் வர்த்தக/ முகாமைத்துவ/ கணக்கியல்/ பிரயோக கணக்கியல் ஆகிய பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. தொழில் தகைமைகள்:

இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ICASL) அல்லது பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகம் (CIMA) அல்லது சான்று பெற்ற பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ACCA) மூலம் நடாத்தப்படும் இடைநிலை மட்டத்திலான பரீட்சையில் (Intermediate Level) சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

5. அனுபவம்:

மேற்குறித்த கல்வித் தகைமைகளையும் மற்றும் தொழிற் தகைமைகளையும் பூர்த்தி செய்ததை தொடர்ந்து அரச சேவையில் அல்லது ஒரு அரச கூட்டுத்தாபனத்தில் அல்லது ஒரு நியதிச் சட்ட சபையில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் நிதித் துறையில் அல்லது கணக்காய்வுத் துறையில் ஒரு முகாமைத்துவ பதவியில்/ பதவிநிலைப் பதவியில்/ நிறைவேற்று மட்டப் பதவியில் 07 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவத்தைப் பெற்ற உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.

அல்லது 

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் ''I" அல்லது அதை விட அதிகப்படியான சம்பளத் தொகுதியிலுள்ள ஒரு பதவியில் 10 வருடங்களுக்குக் குறையாத சேவை அனுபவத்தையுடைய உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.

6. ஆட்சேர்ப்பு முறை:

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும் ஒரு நேர்முகத் தேர்வு குழுவின் மூலம் விண்ணப்பதாரிகளின் கல்வித் தகைமைகள் தொழில் தகைமைகள் மற்றும் விடயம் சார்ந்த அறிவு, துறை சார்ந்த அனுபவம், தொடர்பாடல் திறமைகள் மற்றும் ஆளுமை என்பவற்றை மதிப்பிடும் பொருட்டு நடாத்தப்படுகின்ற ஒரு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். 



7. சேவையில் அமர்த்துவதற்கான நியதிகளும் நிபந்தனைகளும்:

(i) இந்தப் பதவி நிரந்தரமானது. இந்தப் பதவிக்குரிய ஓய்வூதிய சம்பள அளவுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு விண்ணப்பதாரர்கள் இயைந்தொழுக வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் அல்லது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் ஓய்வூதிய உரித்துடைய பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டால் அத்தகைய நபர் ஒரு வருட பதில் கடமை கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதிக்கு ஏற்புடைய நிதி மற்றும் திணைக்கள ஒழுங்குவிதிகளுக்கு இயைந்தொழுக வேண்டும்.

(iii) தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அநாதைகள், விதவைகள் / தபுதாரர் ஓய்வூதிய நிதியத்திற்கு அவரது சம்பளத்திலிருந்து அரசாங்கம் தீர்மானிக்கும் விகிதாசாரத்தில் ஒரு பங்களிப்பு தொகையைச் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

(iv) தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

8. கீழ்க்காணும் சான்றிதழ்களின் (மூலப்பிரதிகளல்ல) பிரதிகளை விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். சமர்ப்பிக்குமாறு கேட்கப்படும் பட்சத்தில் மாத்திரம் அத்தகைய சான்றிதழ்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

(அ) பிறப்புச் அத்தாட்சிப்பத்திரம்;

(ஆ) கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்;

(இ) தொழில்சார் தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்;

(ஈ) அனுபவத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்.

9. அரசாங்க / மாகாண அரசாங்க சேவையில் / அரசாங்க கூட்டுத்தாபனங்களில் மற்றும் நியதிச்சட்ட சபைகளில்/ பாராளுமன்ற செயலாளர் பணியாற்றொகுதியில் பணியாற்றுகின்ற விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அந்தந்த திணைக்கள நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

10. ஏதேனும் வழிகளில் செல்வாக்குகளை பிரயோகிப்பது இந்தப் பதவிக்கான தகைமையை இழக்கச் செய்யலாம்.

11. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு விடயம் பொய்யென ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் கண்டறியப்பட்டால் அவர் தகுதியற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும் மற்றும் நியமனத்தின் பின்னர் அவ்வாறு கண்டறியப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் ஆளாக்கப்படுவார்.

12. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் அல்லது மேற்குறித்த சான்றிதழ்களின் பிரதிகளின்றி அனுப்பப்படும் அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் திணைக்கள தலைவர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும் மாதிரிப்படிவத்திற்கு அமையத் தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். 


இலங்கைப் பாராளுமன்றம் | பிரதம உள்ளக கணக்காய்வாளர் பதவி 
https://sigaram10.blogspot.com/2019/03/srilanka-parliament-post-internal-chief-auditor.html 
#பாராளுமன்றம் #வேலைவாய்ப்பு #அரசாங்கம் #கணக்காய்வு #விண்ணப்பம் #இலங்கை #ஓய்வூதியம் #நேர்முகப்_பரீட்சை #சுயவிவரம் 

No comments:

Post a Comment